Friday, 7 April 2017

ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்...!


பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான "ரகசிய" மருந்துகளாக இருந்தன. 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன. உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ஆமாம் அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment